• Welcome to TamilsGuide
செய்திகள் 1

யாழில் பல்வேறு போதைப்பொருட்களுடன் நால்வர் கைது

இலங்கை

யாழ்ப்பாணம் பகுதியில் ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருளுடன் நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் திருநகர் பகுதியில் ஹெரோயினுடன் இளைஞர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் யாழ்ப்பாணம் திருநகர் பகுதியில், மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது, குறித்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் இருந்து 539 மில்லி கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் திருநகர் பகுதியைச் சேர்ந்த 20 மற்றும் 21 வயதுடைய இரண்டு இளைஞர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாணம் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை, யாழ்ப்பாணம் நகரப் பகுதியில் நேற்றைய தினம் (14) ஐஸ் போதைப் பொருளுடன் 40 மற்றும் 54 வயதுடைய இரு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த சந்தேகநபர்களிடம் இருந்து 27 கிராம் 100 மில்லி கிராம் அளவுடைய ஐஸ் போதப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட இருவரும் யாழ்ப்பாணம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

மேலும், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாணம் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
 

Leave a Reply