இலங்கை மத்திய வங்கி 2000 ரூபா நாணயத்தாள் வெளியிட்டுள்ளது
இலங்கை
இலங்கை மத்திய வங்கி அதன் 75 ஆவது ஆண்டுநிறைவை முன்னிட்டு 2025 ஆகஸ்ட் 29 அன்று 2000 ரூபா சுற்றோட்டத்திற்கு விடப்படும் ஞாபகார்த்த நாணயத்தாளை வெளியிட்டுள்ளது.
புதிய நாணயத்தாளை தங்குதடையின்றி ஏற்றுக்கொள்வதையும் விநியோகிப்பதையும் வசதிப்படுத்தும் பொருட்டு, உரிமம்பெற்ற வர்த்தக வங்கிகள் அவற்றின் பணம் கையாளும் இயந்திரங்களை அளவமைக்கும் செயன்முறையை முன்னெடுக்கின்றன.
இச்செயன்முறையின் முன்னேற்றத்துக்கு ஏற்ப, புதிய நாணயத்தாள் உரிமம்பெற்ற வர்த்தக வங்கிகள் ஊடாக படிப்படியாக சுற்றோட்டத்திற்கு விடப்படும் என்று இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.






















