• Welcome to TamilsGuide
செய்திகள் 1

லண்டனில் வெளிநாட்டினருக்கு எதிராக மிகப்பெரிய பேரணி - எலான் மஸ்க் ஆதரவு

வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள் குடியேறுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆஸ்திரேலியாவில் போராட்டம் நடத்தப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த பரபரப்பு அடங்குவதற்குள் இங்கிலாந்து தலைநகர் லண்டனில் வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள் குடியேறுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மிகப்பெரிய பேரணி நடத்தப்பட்டது.

தீவிர வலதுசாரி ஆர்வலர் டாமி ராபின்சன் ஏற்பாடு செய்த லண்டன் பேரணியில் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டனர்.

இந்த பேரணியில் கலந்து கொண்டவர்களுக்கும் போலீசாருக்கும் மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் 26 போலீசாருக்கு காயம் ஏற்பட்டது. இதனையடுத்து 25 பேரை போலீசார் கைது செய்தனர். இங்கிலாந்தில் இந்தியாவை பூர்வீகமாக கொண்ட நிறைய பேர் வசித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், லண்டனில் வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள் குடியேறுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து நடத்தப்பட்ட மிகப்பெரிய பேரணிக்கு உலக பெரும் பணக்காரரான எலான் மஸ்க் ஆதரவு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மஸ்க் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ள வீடியோவில், "வாக்காளர்களை இறக்குமதி செய்கிறார்கள். தங்கள் நாட்டில் உள்ளவர்கள் தங்களுக்கு வாக்களிக்க மாட்டார்கள் என்று தெரிந்தவுடன் அவர்கள் மற்ற நாடுகளிலிருந்து மக்களை இறக்குமதி செய்து தங்களுக்கு வாக்களிக்கச் செய்வார்கள். இது வெற்றி பெறுவதற்கான ஒரு உத்தி. இதை நிறுத்தவேண்டும்" என்று தெரிவித்தார். 

Leave a Reply