• Welcome to TamilsGuide
செய்திகள் 1

முதலமைச்சரின் வேண்டுகோளை நிச்சயம் நிறைவேற்றுவேன்- இளையராஜா நெகிழ்ச்சி

சினிமா

திரை இசை உலகில் 50 ஆண்டுகளைக் கடந்ததையொட்டி இசைஞானி இளையராஜாவுக்கு தமிழக அரசு சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது.

'சிம்பொனி – சிகரம் தொட்ட தமிழன் இசைஞானி இளையராஜா – பொன்விழா ஆண்டு 50' என்ற தலைப்பில் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இந்த பாராட்டு விழா நடந்தது.

இந்த விழா சிறப்பாக முடிந்த நிலையில், இசைஞானி இளையராஜா நன்றி தெரிவித்து வீடியோ ஒன்றை வௌியிட்டுள்ளார்.

இதுதொடர்பாக இளையராஜா தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

சென்னை, நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் இளையராஜாவின் பொன்விழா ஆண்டு பாராட்டு விழா நேற்று நடந்தது.

நேற்று தமிழக அரசு நடத்திய பாராட்டு விழாவில், அதீத மகிழ்ச்சியின் காரணமாக என்னால் அதிகம் பேச இயலவில்லை.

இந்த விழாவைச் சிறப்பாக நடத்திய தமிழக அரசுக்கும், மாண்புமிகு முதலமைச்சர் திரு. மு. க. ஸ்டாலின் அவர்களுக்கும், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கும், மாண்புமிகு அமைச்சர் பெருமக்களுக்கும் என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கும், உலகநாயகன் கமல்ஹாசன் அவர்களுக்கும், பொதுமக்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள்.
 

Leave a Reply