• Welcome to TamilsGuide
செய்திகள் 1

சைந்தவி உடன் இணைந்து பணியாற்றுவது ஏன்?- ஜி.வி.பிரகாஷ்

சினிமா

நட்சத்திர தம்பதியாக வலம் வந்த ஜி.வி.பிரகாஷ் - சைந்தவி ஜோடி, கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்கிறார்கள். விவாகரத்து பெற்று பிரிந்தாலும், ஜி.வி.பிரகாஷ் இசையில் சைந்தவி மேடை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பாடி வருகிறார்.

இதுகுறித்து ஜி.வி.பிரகாஷ் கூறுகையில், "நாங்கள் ஒருவரையொருவர் மதிக்கிறோம் என்பதால், பிரிவுக்கு பிறகும் எங்களால் இணைந்து பணியாற்ற முடிகிறது. ஒருவரை நாம் பிரிந்தாலும், அவருக்கு தரும் பரஸ்பர மரியாதையைத் தந்தாக வேண்டியது கடமையும் கூட.

வார்த்தையாக மட்டுமல்லாமல், செயலிலும் அது இருக்க வேண்டும். அந்தவகையில் சைந்தவிக்குக் கொடுக்கவேண்டிய மரியாதையை எப்போதுமே நான் தருவேன். சைந்தவி ஒரு அற்புதமான பாடகி. அவரது குரலை எப்போதுமே பயன்படுத்த விரும்புகிறேன்'' என்றார்.
 

Leave a Reply