இரட்டைக் கொலை சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது
இலங்கை
இரட்டைக் கொலை சம்பவம் தொடர்பாகத் தேடப்பட்டு வந்த சந்தேக நபர் ஒருவர் கரந்தெனிய பொலிஸ் நிலைய அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் நேற்று (13) கொட்டவில பகுதியில் கைது செய்யப்பட்டார்.
சந்தேக நபர் கைது செய்யப்பட்டபோது, உள்ளூரில் தயாரிக்கப்பட்ட கைக்குண்டு ஒன்றும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கரந்தெனிய, கொட்டவில பகுதியைச் சேர்ந்த 44 வயதுடையவர்.
கடந்த 11 ஆம் திகதி கரந்தெனிய பொலிஸ் பிரிவின் கபுலகொட பகுதியில் ஒரு பெண் மற்றும் ஒரு ஆணைத் தாக்கி கொலை செய்த குற்றத்தில் சந்தேக நபர் தொடர்புடையவர் என்று பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கரந்தெனிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.























