• Welcome to TamilsGuide
செய்திகள் 1

அனுஷ்காவின் திடீர் முடிவால் ரசிகர்கள் அதிர்ச்சி

சினிமா

ஒருகாலத்தில் தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக கலக்கிய அனுஷ்கா, உடல் எடை கூடி போனதின் விளைவாக படவாய்ப்புகளை இழந்தார்.

2016-ம் ஆண்டில் வெளியான 'சிங்கம்-3' படத்துக்கு பிறகு அனுஷ்கா நேரடி தமிழ் படத்தில் நடிக்கவில்லை. கடைசியாக 2023-ம் ஆண்டு 'மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி' என்ற தெலுங்கு படத்தில் நடித்திருந்தார்.

2 ஆண்டுக்கு பிறகு, விக்ரம் பிரபுவுடன் அவர் நடித்துள்ள 'காட்டி' படம் சமீபத்தில் வெளியானது. பெரியளவில் வரவேற்பைப் பெறாத இந்த படத்தால் அனுஷ்கா வருத்தத்தில் இருந்தார்.

இதற்கிடையில் சமூக வலைதளங்களில் இருந்து விலகுவதாக அவர் அறிவித்துள்ளார். அவர் கூறும்போது, 'உலகத்துடன் கொஞ்சம் தொடர்பில் இருக்கலாம் என்று நினைப்பதால், சமூக வலைதளங்களுக்கு ஓய்வு தருகிறேன். நிறைய கதைகளுடன் விரைவில் சந்திப்பேன்' என்று அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
 

Leave a Reply