நித்திய இளைப்பாறிய அருட்தந்தை பெனடிக்ட் ஜோசப் பெர்னாண்டோவின் இறுதி ஆராதனை தொடர்பான அறிவிப்பு
இலங்கை
இலங்கை கத்தோலிக்க திருச்சபையின் முன்னாள் மக்கள் தொடர்பு பணிப்பாளர் அருட்தந்தை பெனடிக்ட் ஜோசப் பெர்னாண்டோ தனது 85 ஆவது வயதில் இன்று நித்திய இளைப்பாறினார் .
கடந்த சில காலமாக நோய்வாயப்பட்டிருந்த அவர் ஹேவ்லொக் பகுதியில் கத்தோலிக்க திருச்சபையின் Evening Stars என்ற ஓய்வூதிய இல்லத்தில் தனது இறுதி நாட்களைக் கழித்து வந்தார்.
இந்நிலையில் அவரது இறுதி ஆராதனை நிகழ்வுகள் நாளை பிற்பகல் 3.00 மணிக்கு ஆரம்பமாகி பின்னர் பொரல்ல பொது மயானத்தில் அடக்கம் செய்யப்படும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.






















