நான் எழுதிய வசனங்களில் எனக்குப் பிடித்த வரிகளில் இதுவும் ஒன்று.
சினிமா
" இந்தியன் " படத்தில்
தாத்தா தன் மகனைக் கொல்ல
வீட்டிற்கு வருவார்.
அதற்குள் மகன் தப்பித்து
விமான நிலையம் சென்று விடுவார். தாத்தா, பாட்டியிடம் விசாரிப்பார்.
பாட்டி உண்மையை மறைப்பார்.
ஆனால் தாத்தாவிற்கு உண்மை தெரிந்துவிடும்.
இது படத்தின் முக்கியமான காட்சி.
இந்த காட்சியின் ஆரம்பத்திலிருந்து
முடிவு வரை கிட்டத்தட்ட 80% வசனம்
நான் எழுதி இருப்பேன்.
மீதி 20% மற்றவர்கள் எழுதியிருப்பார்கள். தாத்தா, பாட்டியிடமும் மனிஷாவிடமும் பேசி முடித்துவிட்டு மகனைக் கொல்ல விமான நிலையம் கிளம்புவார்.
வாசலுக்கு சென்ற தாத்தா
திரும்பிப் பார்ப்பார்.
பாட்டி சாமி படத்திற்கு முன் நின்று
சாமி கும்பிட்டுக் கொண்டிருப்பார்.
தாத்தா விரல்களால் சுண்டி அழைப்பார். பாட்டி திரும்பிப் பார்ப்பார்.
அப்பொழுது,
தாத்தா : " புத்திசாலித்தனம்னு நெனச்சு, ரெண்டு பேரும் உயிரோடு இருக்கனும்னு வேண்டிக்காதே "
என்று கூறிவிட்டு கிளம்புவார்.
நான் எழுதிய வசனங்களில்
எனக்குப் பிடித்த வரிகளில்
இதுவும்
ஒன்று.
Muthu Vadugu
























