அத்துரலியே ரத்தன தேரருக்கு பிணை
இலங்கை
விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்தன தேரருக்கு நுகேகொடை நீதிவான் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.
அதன்படி, அவர் 10,000 ரூபாய் ரொக்கப் பிணையிலும் தலா 500,000 ரூபாய் பெறுமதியான இரு சரீரப் பிணையிலும் விடுவிக்கப்பட்டுள்ளார்.
2020 ஆம் ஆண்டு நமது மக்கள் சக்தி கட்சியின் (OPPP) பொதுச் செயலாளர் அத்துரலியே விமலதிஸ்ஸ தேரர் கடத்தப்பட்டதாகக் கூறப்படும் வழக்கில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பொலிஸாரால் தேடப்பட்டு வந்தார்.
விமலதிஸ்ஸ தேரரை கடத்தியதில் தொடர்புடையவர் என ரதன தேரர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
நாடாளுமன்றத்தில் தேசியப் பட்டியல் பதவியைப் பெறுவதற்கான ஆவணங்களில் அவர் கட்டாயப்படுத்தி கையெழுத்திட்டதாகக் கூறப்படுகிறது.
ஆகஸ்ட் 18 ஆம் திகத நுகேகொடை நீதிவான் நீதிமன்றம் தேரருக்கு பிடியாணை உத்தரவு பிறப்பித்தது.
அதன் பின்னர் அவர் ஆகஸ்ட் 29 ஆம் திகதி நுகேகொட நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜரான பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.























