அணைக்கப்பட்ட சபுகஸ்கந்த தீப்பரவல்
இலங்கை
சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் ஏற்பட்ட தீப்பரவல் தற்போது முழுமையாக அணைக்கப்பட்டுள்ளது.
கொழும்பு தீயணைப்பு படையின் 07 தீயணைப்பு வாகனங்கள் உட்பட பல தீயணைப்பு வாகனங்கள் மூலம் தீயை அணைக்க நடவடிக்கை எடுத்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் புதுப்பித்தல் பணிகள் நடைபெற்று வந்த தொட்டியில் நேற்று (10) இரவு தீ விபத்து ஏற்பட்டது.
இதையடுத்து தீயை அணைக்க நீண்ட நேர போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
தீ விபத்துக்கான காரணம் இன்னும் வெளியாகவில்லை.
இன்று (11) இது குறித்த விசாரணைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.






















