நேபாளத்தில் மால்களுக்குள் புகுந்து பொருட்களைக் கொள்ளையடித்த மக்கள்
அண்டை நாடான நேபாளத்தில் 2008 இல் மன்னராட்சி முடிவுக்கு கொண்டுவரப்பட்டு தற்போது வரை கம்யூனிஸ்ட் அரசு ஆட்சியில் இருந்தது.
இந்நிலையில் சமூக ஊடகங்களுக்கு விதிக்கப்பட்ட தடை விவகாரத்தால் நேபாளத்தில் அரசியல் நெருக்கடி உச்சத்தை எட்டியுள்ளது.
ஜென் Z இளைஞர்கள் மேற்கொண்ட தீவிர போராட்டங்களால் பிரதமர் கே.பி. சர்மா ஒலியின் (73) கம்யூனிஸ்ட் அரசு கவிழ்ந்தது.
அவருடன் சேர்ந்து, நாட்டின் ஜனாதிபதி ராம்சந்திர பவுடேலும் ராஜினாமா செய்தார். இதனால் நாடு நிச்சயமற்ற நிலையில் உள்ளது.
நேபாளத்தில் நிலவி வரும் அரசியல் பதற்றமான சூழ்நிலை காரணமாக, சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது.
இந்த நிலைமையைப் பயன்படுத்தி, வன்முறைக் கும்பல்கள் வணிக வளாகங்களுக்குள் புகுந்து, டிவி, ஏசி மற்றும் குளிர்சாதனப் பெட்டிகள் உள்ளிட்ட பொருட்களைக் கொள்ளையடித்துள்ளனர்.
இதற்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என நேபாள ராணுவம் எச்சரித்துள்ளது.























