• Welcome to TamilsGuide
செய்திகள் 1

ரவி மோகனின் பிறந்தநாளை முன்னிட்டு, சிறப்பு போஸ்டர் வெளியிட்ட பராசக்தி படக்குழு

சினிமா

சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் அவரது 25-வது படமாக பராசக்தி திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை ஆகாஷ் பாஸ்கரனின் Dawn Pictures தயாரிக்கிறது.

இந்த படத்தில் அதர்வா, ரவி மோகன் மற்றும் பசில் ஜோசஃப் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். நாயகியாக ஸ்ரீலீலா நடிக்கிறார். இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார். சுமார் ரூ.150 கோடி பட்ஜெட்டில் இந்த படம் உருவாகி வருகிறது.

இந்நிலையில் இன்று பிறந்தநாள் கொண்டாடும் நடிகர் ரவி மோகனுக்கு வாழ்த்து தெரிவித்து படக்குழு சிறப்பு போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது.

மேலும் பராசக்தி படத்தின் இயக்குனர் சுதா கொங்கராவும் தனது எக்ஸ் பக்கத்தில் ரவி மோகனுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
 

Leave a Reply