அருண ஜெயசேகரவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஏற்றுக்கொள்ள முடியாது
இலங்கை
பாதுகாப்பு துணை அமைச்சர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் அருண ஜெயசேகரவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்த தனது முடிவை சபாநாயகர் இன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளார்.
அரசியலமைப்பின் விதிகளுக்கு முரணாகவும், சரியான முறையில் இல்லாததால், நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என்று சபாநாயகர் மேலும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.






















