2026 நிதி ஒதுக்கீட்டு சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க அனுமதி
இலங்கை
2026 நிதி ஆண்டுக்கான ஒதுக்கீட்டு சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
முன்னதாக, ஜூலை 01 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், ஒதுக்கீட்டு சட்டமூலத்தை வரைவதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
சட்ட வரைவாளரால் தயாரிக்கப்பட்ட சடடமூலம், பின்னர் சட்டமா அதிபரிடமிருந்து அனுமதியைப் பெற்றுள்ளது.
அதன்படி, சட்டமூலம் நாடாளுமன்றத்தில் ஒப்புதலுக்காக சமர்ப்பிப்பதற்கு முன்பு அரசு வர்த்தமானியில் வெளியிடுவதற்கான ஜனாதிபதியின் முன்மொழிவையும் அமைச்சரவை அங்கீகரித்தது.






















