டூரிஸ்ட் ஃபேமிலி இயக்குநருக்கு ஜோடியாக நடிக்கும் அனஸ்வராவுக்கு பிறந்தநாள் கொண்டாடிய படக்குழு
சினிமா
அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில் சில மாதங்களுக்கு முன் சசிகுமார் மற்றும் சிம்ரன் நடிப்பில் டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படம் வெளியானது. இப்படம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வெற்றி திரைப்படமாக உருமாறியது. இதனை தொடர்ந்து அபிஷன் அடுத்ததாக கதாநாயகன் அவதாரத்தை எடுத்துள்ளார்.
Zion Films & MRP Entertainment நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் புதிய படத்தில் 'டூரிஸ்ட் ஃபேமிலி' இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் கதாநாயகனாக அறிமுகமாகிறார். இப்படத்தை மதன் இயக்க ஷான் ரோல்டன் இசையமைக்கிறார்.
இப்படத்தில் அபிஷன் ஜீவிந்துக்கு ஜோடியாக அனஸ்வரா ராஜன் நடிக்கிறார். இந்நிலையில், அனஸ்வரா ராஜன் பிறந்தநாளை ஒட்டி படக்குழு அனஸ்வராவுக்கு கேக் வெட்டி கொண்டாடியுள்ளது. இது தொடர்பான புகைப்படங்களை படக்குழு வெளியிட்டுள்ளது.






















