• Welcome to TamilsGuide
செய்திகள் 1

தேஜா சஜ்ஜா நடித்த மிராய் படத்திற்கு யு/ஏ சான்றிதழ்

சினிமா

2011 ஆம் ஆண்டு சாம்பி ரெட்டி படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகினார் தேஜா சஜ்ஜா . தெலுங்கு சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களுள் ஒருவர் இவர். இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த ஹனுமேன் திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

இதைத்தொடர்ந்து தேஜா சஜ்ஜாவின் அடுத்த படமாக மிராய் என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை ஒளிப்பதிவாளர் மற்றும் இயக்குனரான கார்த்திக் கட்டாமானேனி இயக்கியுள்ளார். பீபில் மீடியா ஃபேக்டரி நிறுவனம் மிராய் படத்தை தயாரிக்கவுள்ளனர்.

படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்ட்ரையும் பட முன்னோட்டத்தையும் படக்குழுவினர் கடந்தாண்டு வெளியிட்டனர்.

தமிழ், கன்னடம், மலையாளம், இந்தி என அனைத்து மொழிகளிலும் 2டி மற்றும் 3டியில் வெளியாகவுள்ள இத்திரைப்படம் வரும் செப்டம்பர் 12 ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது.

மிராய் படத்தின் டிரெய்லர் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.

இப்படத்தில் மனோஜ் மஞ்சு வில்லனாகவும், ரித்திகா நாயக், தேஜா சஜ்ஜாவுக்கு ஜோடியாகவும் நடித்துள்ளனர்.

இந்நிலையில், மிராய் படத்திற்கு தணிக்கை குழு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.
 

Leave a Reply