• Welcome to TamilsGuide
செய்திகள் 1

நேபாள் போராட்டம் - 19 பேர் பலியானதை அடுத்து சமூக ஊடகங்கள் மீதான தடையை நீக்கி பிரதமர் சர்மா ஒலி உத்தரவு

நேபாளத்தின் தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சகத்தின் விதிமுறைகளுக்கு உள்பட்டு பதிவு செய்யத் தவறிய இன்ஸ்டாகிராம், பேஸ்புக், யூடியூப், எக்ஸ் உள்ளிட்ட 26 சமூக ஊடக தளங்களுக்கு அந்நாட்டு அரசு தடை விதித்தது.

நேபாளத்தில் விதிக்கப்பட்ட இந்த தடையை எதிர்த்து நேற்று போராட்டம் வெடித்தது.

பெரும் அளவிலான இளைஞர்கள் காத்மாண்டுவில் நாடாளுமன்றம் உள்ளிட்ட முக்கியப் பகுதிகளை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நாடாளுமன்றத்திற்குள் நுழைய முயன்றபோது போராட்டக்காரர்களை கட்டுப்படுத்த போலீசார் நடத்திய துப்பாக்கிசூட்டில் உயிரழந்தோரின் எண்ணிக்கை 19 பேர் ஆக உயர்ந்துள்ளது. 300க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

இதையடுத்து நேபாள உள்துறை அமைச்சர் ரமேஷ் லேகாக் இதற்கு தார்மீக ரீதியாக பொறுப்பேற்று தனது ராஜினாமா கடிதத்தைச் பிரதமர் சர்மா ஒலியிடம் சமர்ப்பித்தார்.

இதற்கிடையே இந்த விவகாரம் தொடர்பாக நேற்று அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. மேலும் இதுதொடர்பான அவசர கூட்டமும் நடத்தப்பட்டு சமூக ஊடகங்களுக்கான தடை நள்ளிரவில் நீக்கப்பட்டுள்ளது. நிறுத்தப்பட சேவைகளை விரைவில் தொடங்க வழிவகை செய்யப்பட்டுள்ளதாக அரசு தரப்பு தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக பிரதமர் சர்மா ஒலி வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசாங்கத்தின் முயற்சிகளும், ஜென் Z தலைமுறையினரிடையே உள்ள தெளிவின்மையும் இந்த விரும்பத்தகாத சம்பவத்திற்கு வழிவகுத்தன.

சமூக ஊடகங்களின் பயன்பாட்டைக் கட்டுப்படுத்துவது அரசாங்கத்தின் நோக்கம் அல்ல. அதன் பயன்பாட்டிற்கு உகந்த சூழலை உறுதி செய்யாவே நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது" என்று குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு மத்தியில் தலைநகர் காத்மாண்டுவில் நாடாளுமன்றம், பிரதமர் அலுவலகம் மற்றும் ஜனாதிபதி இல்லம் உள்ளிட்ட பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 
 

Leave a Reply