• Welcome to TamilsGuide
செய்திகள் 1

ஏமாற்றிய ரங்கராஜ்: ஸ்டாலின் அப்பா... நீதி வாங்கி கொடுங்க... ஜாய் கிரிசில்டா வேண்டுகோள்

சினிமா

பிரபல சமையல் கலைஞர் மற்றும் நடிகரான மாதம்பட்டி ரங்கராஜன் மற்றும் அவரது இரண்டாவது மனைவி ஜாய் கிரிசில்டா குறித்த சர்ச்சைகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகின்றன.

ஜாய் கிரிசில்டா இது தொடர்பாக நீதிமன்றத்தில் மாதம்பட்டி ரங்கராஜ் மீது வழக்கு தொடர்ந்துள்ளார்.

இந்த விவகாரம் இப்போது அடுத்த கட்டத்திற்கு நகர்ந்து, ஜாய் கிரிசில்டா அதிகாரப்பூர்வமாகப் புகார் அளித்து, சமூக வலைதளத்தில் பகிரங்கமாக நீதி கேட்டுள்ளார்.

மாதம்பட்டி ரங்கராஜ் பற்றிய சர்ச்சை மாதம்பட்டி ரங்கராஜன் ஏற்கனவே ஸ்ருதி என்ற பெண்ணை திருமணம் செய்து, அவர்களுக்கு இரண்டு குழந்தைகளும் உள்ளனர். ஆனாலும், முதல் மனைவியைப் பிரியாமலேயே, ஆடை வடிவமைப்பாளரான ஜாய் கிரிசில்டாவை இரண்டாவதாகத் திருமணம் செய்து கொண்டதுதான் இந்தச் சர்ச்சைகளின் ஆரம்பம். ஜாய், ரங்கராஜ் தனக்குக் கடன் இருப்பதாகவும், கர்ப்பத்தைக் கலைக்கச் சொன்னதாகவும் முன்னர் பேட்டிகளில் தெரிவித்திருந்தார்.

இன்ஸ்டாகிராமில் வைத்த பகிரங்க வேண்டுகோள் தற்போது ஜாய் கிரிசில்டா தனது இன்ஸ்டாகிராம் மற்றும் எக்ஸ் பக்கத்தில் ஒரு பரபரப்பான பதிவை வெளியிட்டுள்ளார். அவர் பதிவில் கூறியுள்ள முக்கிய விஷயங்கள் இதோ: "எனது பிறக்காத குழந்தைக்காக நீதி வேண்டும்" என்று கோரி பதிவிட்டுள்ளார். நடிகர் மாதம்பட்டி ரங்கராஜன், திருமணத்தையும் கர்ப்பத்தையும் காரணம் காட்டி, எப்படி ஏமாற்றினார் என்பதை விவரித்து, 10 நாட்களுக்கு முன்பு சென்னை நகர போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்தேன். நான் தற்போது ஏழு மாத கர்ப்பமாக இருக்கிறேன். புகார் அளிப்பதற்காக நான் என்னுடைய முற்றிலும் கண் தெரியாத தாயுடன் கமிஷனர் அலுவலகத்திற்கு நேரில் சென்றேன்.

அந்த புகாரின் நிலை என்னவென்று தெரியவில்லை. ஆனால் நான் புகாரலித்த ரங்கராஜ் சொகுசாக வாழ்ந்து வருகிறார். என்மேல் சமூக வலைத்தளங்களில் தவறான குற்றச்சாட்டுகளை எழுப்பி வருகிறார்.

அப்பா , என்னைப்போல் உதவியற்று நிற்கும் பெண்களுக்கு உங்களுடைய ஆட்சி நீதி வழங்க வேண்டும். நான் கைக்கூப்பி கேட்டுக் கொள்கிறேன் எனக்கு நீதி பெற்று கொடுங்கள், தவறு செய்தவன் எப்படி எந்த ஒரு தண்டனையும் இல்லாமல் சுதந்திரமாக இருக்கலாம்? என ஸ்டாலின், சென்னை கமிஷ்னர், சென்னை காவல் என அனைவரையும் டேக் செய்து பதிவு செய்துள்ளார்.

Leave a Reply