• Welcome to TamilsGuide
செய்திகள் 1

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் உரையாற்றவுள்ள வெளிவிவகார அமைச்சர்

இலங்கை

மனித உரிமைகள் பேரவையின் 60 ஆவது அமர்வில் இலங்கை தூதுக்குழுவை வழிநடத்தும் வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத், இலங்கையில் மனித உரிமைகள் நிலைமை குறித்த ஐ.நா. மனித உரிமைகள் உயர் ஸ்தானிகரின் அறிக்கையை சமர்ப்பித்த பின்னர் சபையில் உரையாற்றுவார்.

இந்த அறிக்கை, சபையுடனான இலங்கையின் தொடர்ச்சியான ஆக்கபூர்வமான ஈடுபாட்டிற்கு ஏற்ப வழங்கப்படும் என்று வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த அமர்வின் போது அமைச்சர், நாடுகளுடனும், ஐ.நா. மனித உரிமைகள் உயர் ஸ்தானிகருடனும் இருதரப்பு சந்திப்புகளை நடத்துவார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் (HRC) 60 ஆவது அமர்வு 2025 செப்டம்பர் 8 முதல் ஒக்டோபர் 8 வரை ஜெனீவாவில் நடைபெற உள்ளது.
 

Leave a Reply