• Welcome to TamilsGuide
செய்திகள் 1

ஸ்ரீ தலதா மாளிகையின் பதில் தியவதன நிலமேயாக முன்னாள் தியவதன நிலமே பிரதீப் நிலங்க தெல

இலங்கை

ஸ்ரீ தலதா மாளிகையின் முன்னாள் தியவதன நிலமே பிரதீப் நிலங்க தெல, பதில் தியவதன நிலமேயாக மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.

மல்வத்து மற்றும் அஸ்கிரிய பீடங்களின் மகாநாயக்க தேரர்களின் பரிந்துரையின் பேரில் பௌத்த அலுவல்கள் ஆணையாளரினால் மூன்று மாதங்களுக்கு செயற்படுவதற்காக கண்டி ஸ்ரீ தலதா மாளிகையின் முன்னாள் தியவதன நிலமே நிலங்க தெல பதில் தியவதன நிலமேயாக நியமிக்கப்பட்டுள்ளார்.

பௌத்த விவகார ஆணையாளரின் மேற்பார்வையின் கீழ் எதிர்வரும் டிசம்பர் 07 ஆம் திகதிக்கு முன்னர் பஸ்நாயக்க நிலமேக்கான தேர்தல் நடத்தப்பட வேண்டுமென ஸ்ரீ தலதா மாளிகை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
 

Leave a Reply