• Welcome to TamilsGuide
செய்திகள் 1

கல்முனை பகுதியில் ஹெரோயின் போதைப் பொருளுடன் ஒருவர் கைது

இலங்கை

அம்பாறை மாவட்டம் கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தனியார் ஐஸ் வாடி பகுதியில் ஹெரோயின் போதைப் பொருளுடன் நடமாடிய இளைஞனை நேற்று (7) இரவு கல்முனை விசேட அதிரடிப் படையினர் கைது செய்துள்ளனர்.

கல்முனை விசேட அதிரடிப்படை புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது 25 வயது மதிக்கத்தக்க 1 பிள்ளையின் தந்தையான கல்முனை பகுதியைச் சேர்ந்த சந்தேக நபர் ஹெரோயின் போதைப் பொருளுடன் கல்முனை விசேட அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அத்துடன் கைது செய்யப்பட்ட கடற் தொழில் செய்யும் சந்தேக நபரிடம் இருந்து 740 மில்லிகிராம் ஹெரோயின் போதைப் பொருள் மீட்கப்பட்டதுடன் சந்தேக நபர் உட்பட சான்றுப்பொருட்கள் யாவும் சட்ட நடவடிக்கைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளது.
 

Leave a Reply