Unstoppable Thalaivar - 25-வது நாளில் வெற்றிநடைப்போடும் கூலி
சினிமா
நடிகர் ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் வெளியான திரைப்படம் கூலி. இப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தில் அமீர் கான், சத்யராஜ், நாகர்ஜுனா, சௌபின் ஷாஹிர், சுருதிஹாசன், பகத் பாசில், ரெபா மோனிகா ஜான் மற்றும் உபேந்திரா ஆகியோர் நடித்துள்ளனர்.
திரைப்படம் இன்றுடன் 25-வது நாள் வெற்றிகரமாக திரையரங்கில் ஓடிக்கொண்டிருக்கிறது. வரும் செப்டம்பர் 11 ஆம் தேதி கூலி திரைப்படம் அமேசான் பிரைம் வீடியோ ஓடிடியில் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.























