• Welcome to TamilsGuide
செய்திகள் 1

இலங்கைக்கு வந்து குவியும் பில்லியன் கணக்கான டொலர் வருமானம்

இலங்கை

இந்த ஆண்டு ஒகஸ்ட் மாதம் வரையான காலப்பகுதிக்குள் 5.116 பில்லியன் அமெரிக்க டொலர்களை வெளிநாட்டில் பணிபுரிவோர் அனுப்பியுள்ளனர்.

இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள சமீபத்திய புள்ளிவிவரங்களின் மூலம் இந்த விடயம் தெரியவந்துள்ளது.

இதன்படி, இந்த ஆண்டு ஒகஸ்ட் மாதம் மட்டும் வெளிநாட்டு தொழிலாளர்களின் மொத்த பணம் அனுப்புதல் 680.8 மில்லியன் அமெரிக்க டொலர்கள் ஆகும்.

மேலும், இந்த ஆண்டு ஒகஸ்ட் வரை அனுப்பப்பட்ட 5.116 பில்லியன் அமெரிக்க டொலர்கள், இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தை விட 19.3 சதவீதம் அதிகம் என மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

இதேவேளை, இந்த ஆண்டின் முதல் எட்டு மாதங்களில் சுற்றுலா வருவாய் 2.03 பில்லியன் அமெரிக்க டொலர்கள் என கணக்கிடப்பட்டுள்ளது.

இது, கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியில் பெறப்பட்ட 1.88 பில்லியன் அமெரிக்க டொலர்களுடன் ஒப்பிடும் போது, 7.8 சதவீதம் அதிகமாகும்.

Leave a Reply