சிவகார்த்திகேயன் மதராஸி பட சண்டை காட்சிக்கு தயாராகும் வீடியோ ரிலீஸ்
சினிமா
பிரபல இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயனின் 'மதராஸி' திரைப்படம் நேற்று உலகம் முழுவதும் வெளியானது. திரைப்படத்தை பார்த்து ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
இந்த படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து ருக்மிணி வசந்த், விக்ராந்த், வித்யூத் ஜம்வல், பிஜு மேனன், டான்சிங் ரோஸ் சபீர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார். படத்தின் டிக்கெட் முன்பதிவுகள் வேகமாக நடைப்பெற்று வருகிறது.
இந்நிலையில் படத்தின் சண்டை காட்சிக்கு பயிற்சி செய்யும் வீடியோ இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வேகமாக பரவி வருகிறது.























