ரசிகர்களை கட்டிப்போடும் த்ரில்லராக பிளாக்மெயில் இருக்கும்- ஜி.வி.பிரகாஷ் குமார்
இயக்குனர் மாறன் இயக்கத்தில், JDS ஃபிலிம் ஃபேக்டரி பேனரில் ஜெயக்கொடி அமல்ராஜ் தயாரிப்பில் ஜி.வி. பிரகாஷ்குமார் நடித்துள்ள 'பிளாக்மெயில்' திரைப்படம் வரும் செப்டம்பர் 12ம் தேதி அன்று திரையரங்குகளில் வெளியாகிறது.
படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகர் ஜிவி பிரகாஷ் கூறுகையில்," படக்குழுவினர் அனைவரும் சின்சியராக வேலை பார்த்துள்ளார்கள். நல்ல படத்தை மாறன் கொடுத்துள்ளார்.
படம் எனக்கு மிகவும் பிடித்துள்ளது. உங்களை கட்டிப்போடும் த்ரில்லராக படம் இருக்கும். இந்தப் படம் தயாரிப்பாளருக்கு லாபகரமானதாக அமைய வேண்டும். எங்கள் படத்திற்கு ஆதரவு கொடுத்த தனஞ்செயன் சாருக்கும் நன்றி.
ரமேஷ் சார், முத்துக்குமார் சார், தேஜூ, லிங்கா மற்றும் தொழில்நுட்பக்குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துக்கள். இடைவேளைக்கு முன்பு வரும் 40 நிமிடங்கள் நிச்சயம் உங்களுக்கு பிடிக்கும். படம் பார்த்துவிட்டு சொல்லுங்கள்" என்றார்.
























