• Welcome to TamilsGuide
செய்திகள் 1

மதராஸி வெற்றி பெற பழனியில் இன்று மொட்டையடித்து இயக்குனர் முருகதாஸ் மனமுருக வழிபாடு

சினிமா

ரமணா, துப்பாக்கி உள்ளிட்ட வெற்றி படங்களை இயக்கிய இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மதராஸி திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியானது. நடிகர் சிவகார்த்திகேயனை முதன் முதலாக வைத்து இயக்கி உள்ள ஏ.ஆர்.முருகதாசுக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்து வரும் நிலையில் மதராஸி வெற்றி பெற வேண்டி இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இன்று பழனியில் சிறப்பு வழிபாடு செய்தார்.

அடிவாரத்துக்கு அதிகாலையிலேயே வந்த அவர் மொட்டையடித்து பின்னர் மலைக்கோவிலுக்கு சென்று அங்கு தண்டாயுதபாணி சுவாமியை மனமுருக வழிபட்டார். பின்னர் மீண்டும் கீழே வந்த முருகதாஸ் 3-ம் படை வீடான திருஆவினன்குடி கோவிலில் வழிபட்டார்.

அவர் மொட்டை தலையுடன் இருந்ததால் பெரும்பாலான பக்தர்களால் அடையாளம் கண்டுபிடிக்க முடியவில்லை. இருந்தபோதும் ஒருசில பக்தர்கள் அவரை அடையாளம் கண்டு அவருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். 
 

Leave a Reply