எல்ல-வெல்லவாய பேருந்து விபத்து - தங்காலை நகர சபையின் செயலாளர் உட்பட 12 ஊழியர்கள் உயிரிழப்பு
இலங்கை
எல்லா–வெல்லவாய பிரதான வீதியின் 24ஆவது கிலோமீற்றர் கம்பத்துக்கு அருகிலுள்ள பள்ளத்தாக்கில் நேற்றிரவு (04) பேருந்து ஒன்று கவிழ்ந்து பெரும் விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் இதுவரை 15 பேர் உயிரிழந்துள்ளனர் என பொலிஸார் உறுதிப்படுத்தினர். உயிரிழந்தவர்களில் தங்காலை நகர சபையின் செயலாளர் உட்பட 12 ஊழியர்கள் அடங்குவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் உயிரிழந்தவர்களில் 6 ஆண்கள் மற்றும் 9 பெண்கள் அடங்குவதாகவும், மேலும் சிறுவர்கள் உட்பட 18 பேர் காயமடைந்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் காயமடைந்தவர்களில் 11 ஆண்கள் மற்றும் 7 பெண்கள் அடங்குவர் எனவும் அவர்கள் அருகிலுள்ள வைத்தியசாலைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
























