• Welcome to TamilsGuide
செய்திகள் 1

105 மில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருளுடன் இந்தியர் கைது

இலங்கை

கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து 105 மில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருளுடன் இந்தியப் பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர் விமான நிலையத்தின் “கிரீன் சேனல்” வழியாக குஷ்” கஞ்சாவை கடத்த முயன்ற வேளையில் இன்று (05) காலை சுங்க அதிகாரிகள் குழுவால் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் இந்தியாவின் புது டெல்லியில் உள்ள ஒரு காலணி விற்பனை நிலையத்தில் பணிபுரியும் 43 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

அவர் தாய்லாந்தின் பேங்கொக்கில் இந்த போதைப்பொருளை வாங்கி, புது டெல்லிக்கு பயணித்து, அங்கிருந்து இன்று காலை 07.45 மணிக்கு ஏர் இந்தியா AI 277 விமானத்தின் மூலமாக கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் 10.750 கிலோ கிராம் எடை கொண்டதாகும்.

கைதான சந்தேக நபரை மீட்கப்பட்ட போதைப்பொருளுடன் மேலதிக விசாரணைகளுக்காக கட்டுநாயக்க விமான நிலையத்தில் உள்ள பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பணியகத்தின் (PNB) அதிகாரிகளிடம் ஒப்படைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
 

Leave a Reply