3 மில்லியன் ரூபாவிற்கும் அதிக பெறுமதி யான போதைப்பொருளுடன் ஒருவர் கைது
இலங்கை
03 மில்லியன் ரூபாவிற்கும் அதிக பெறுமதி கொண்ட ஐஸ் மற்றும் குஷ் போதைப்பொருளுடன் சிகிரிய அதுருதஹன் என்ற போதைப்பொருள் வர்த்தகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சிகிரியா பொலிஸ் குழுவினரால் நேற்று (04) பிற்பகல் முன்னெடுக்கப்பட்ட திடீர் சோதனை நடவடிக்கையின் போதே குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சிகிரிய ரங்கிரிகம பகுதியைச் சேர்ந்த குறித்த சந்தேகநபரிடமிருந்து 100 கிராம் 280 மில்லிகிராம் குஷ், போதைப்பொருள் 50 கிராம் 11 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் , சுமார் 23,000 ரூபாய் பணம் மற்றும் 2 கையடக்க தொலைபேசிகள் என்பன பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இதேவேளை, குறித்த சந்தேக நபர் இதற்கு முன்னர் கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டவர் என கூறப்படுகிறது.
சம்பவம் குறித்து சிகிரிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.























