• Welcome to TamilsGuide
செய்திகள் 1

தெல்லிப்பழை துர்க்கை அம்மன் ஆலயத்தின் தேர் உற்சவம்

இலங்கை

வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ்ப்பாணம் தெல்லிப்பழை துர்க்கை அம்மன் ஆலயத்தின் தேர் உற்சவம் இன்று வெகு சிறப்பாக நடைபெற்றது.

பஞ்ச கோபுரங்களைக் கொண்ட தெல்லிப்பழை துர்க்கை அம்மன் ஆலயத்தின் 2025 மகோற்சவ பெருவிழாவில் இன்று காலை பக்தர்கள் புடை சூழ இனிதே இடம்பெற்றது.

இதன்போது  அம்பாளுக்கு விசேட அபிஷேகங்கள் ஆராதனைகள் நடைபெற்று வசந்த மண்டபத்தில் விநாயகப் பெருமான் துர்க்கை அம்மன் முருகப்பெருமான் ஆகியோருக்கு சிறப்பு பூசைகள் நடைபெற்றன.

இதனைத் தொடர்ந்து தெல்லிப்பழை துர்க்கை அம்மன் வசந்த மண்டபத்தில் இருந்து வெளி வீதி எழுந்தருளி தேரிலே ஆரோகணித்து மங்கள வாத்தியங்கள் முழங்க பிராமண ஆச்சாரியர்களின் வேத மந்திரங்கள் ஒலிக்க பக்தர்களுக்கு அருள் காட்சி அளித்தார்.

அரோகரா கோசத்துடன் பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க தெல்லிப்பழை துர்க்கை அம்மன் ரத உற்சவம் இனிதே நடைபெற்றது.

12 நாட்களைகொண்ட இவ்வாலய மகோற்சவத்தில் கடந்த 25 திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பான மகோற்சவத்தில் 10 நாட்கள் சிறப்பான திருவிழாக்கள் தினமும் சிறப்பாக நடைபெற்ற நிலையில் 11 நாளான இன்று ரத உற்சவமும் நாளை 12-ஆம் நாள் திருவிருவிழாவாக தீர்த்த உற்சவமும்  நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 

Leave a Reply