• Welcome to TamilsGuide
செய்திகள் 1

அமெரிக்கா இல்லாமல் உலகில் அனைத்தும் இறந்துவிடும் - சர்ச்சையை கிளப்பும் ட்ரம்பின் கருத்து

அமெரிக்கா இல்லையென்றால் உலகில் உள்ள அனைத்தும் இறந்துவிடும் என அந்நாட்டு ஜனாதிபதி ட்ரம்ப் கூறியுள்ளார்.

ஓவல் அலுவலகத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: எனது முதல் ஆட்சி காலத்தில் அமெரிக்காவின் பொருளாதாரத்தை மிகப்பெரியதாக மாற்றினேன். ஆனால், ஜோ பைடன் நிர்வாகம் செய்த செயல்களால் சீரழியத்துவங்கியது.

வரிகள் மூலம் அமெரிக்காவின் நிதி பலம் பெற்று வருகிறது. வரி காரணமாக அதிகளவு பணம் வருகிறது. நமக்கு அனைத்தையும் வரி பெற்று தருகிறது. அமெரிக்கா இல்லை என்றால் உலகில் உள்ள அனைத்தும் அழிந்துவிடும். இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக அவர் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், வரி மூலம் சீனா, இந்தியா, பிரேசில் நம்மை அழிக்கிறது. அவர்கள் செய்வதை விட வரி சிறந்தது. உலகில் உள்ள எந்த மனிதர்களையும் விட வரியை நான் புரிந்து கொண்டேன்.

உலகில் அமெரிக்க பொருட்களுக்கு அதிக வரி விதிக்கும் நாடாக இந்தியா திகழ்கிறது. இனிமேல் வரி இருக்காது என என்னிடம் தெரிவித்துள்ளனர். அவர்கள் மீது வரி விதிக்கவில்லை என்றால், இந்த சலுகை கிடைத்து இருக்காது. இவ்வாறு ட்ரம்ப் கூறினார்.
 

Leave a Reply