• Welcome to TamilsGuide
செய்திகள் 1

506 BYD மின்சார வாகனங்களை விடுவிப்பதாக சுங்கத் திணைக்களம் உறுதி

இலங்கை

மேலதிக வங்கி உத்தரவாதங்கள் சமர்ப்பிக்கப்பட்டதன் மூலம், தடுத்து வைக்கப்பட்டுள்ள மொத்தம் 506 BYD மின்சார வாகனங்களை விடுவிப்பதாக இலங்கை திணைக்களம் இன்று (03) மேல்முறையீட்டு நீதிமன்றத்திற்கு உறுதிமொழி அளித்தது.

மின்சார வாகனங்களை இறக்குமதி செய்யும் ஜான் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் நிறுவனம் தாக்கல் செய்த மனு, மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, ​​இந்த உறுதிமொழி வழங்கப்பட்டுள்ளது.

அதேநேரம், சுங்கத் திணைக்களத்தினால் தடுத்து வைக்கப்பட்டுள்ள அடுத்த வாகனங்களின் தொகுப்பு தொடர்பான நீதிமன்ற வழக்கு அடுத்த வாரம் எடுத்துக்கொள்ளப்படும்.

மோட்டார் திறன் அறிவிப்பை மீறி நாட்டுக்கு இறக்குமதி செய்யப்பட்ட சுமார் 2,000 சீனத் தயாரிப்பு BYD மின்சார வாகனங்களை சுங்கத் திணைக்களதம் தடுத்து வைத்தது.

அண்மைய கணிக்கிற்கு முன்பு கடந்த மாதம் சுமார் 1,000 வாகனங்களை அது விடுவித்தது.

இலங்கை ஏற்கனவே தடுத்து வைக்கப்பட்டுள்ள வாகனங்கள் உட்பட சுமார் 4,500 BYD வாகனங்களை இறக்குமதி செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
 

Leave a Reply