• Welcome to TamilsGuide
செய்திகள் 1

ஜனாதிபதி செயலகத்தை அடைந்த பிண்டபாத யாத்திரை

இலங்கை

இன்று (03) காலை கோட்டை சம்புத்தாலோக விகாரைக்கு அருகாமையில் ஆரம்பமான பிண்டபாத யாத்திரை ஜனாதிபதி செயலகத்தை அடைந்தது.

இதன்போது மகா சங்கத்தினருக்கு, பிரிகர வழங்கும் பூஜையில் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க இணைந்து கொண்டார்.

நாடளாவிய ரீதியில் தொலைதூரப் பிரதேசங்களில் அமைந்துள்ள பிரிவேனா மற்றும் பௌத்த அறநெறிப் பாடசாலைகளில் கல்வி கற்கும் மாணவர்களின் நலனுக்கான உதவிகளைப் பெறுவதற்காக, கண்டி பௌத்த மற்றும் நலன்புரிச் சங்கம் வருடாந்தம் இப் பிண்டபாத யாத்திரையை ஏற்பாடு செய்து வருகின்றது.

இம்முறை, நூறு தேரர்கள் பிண்டபாத யாத்திரையில் கலந்து கொண்டதுடன் கொழும்பு கோட்டையில் உள்ள பல்வேறு தனியார் மற்றும் அரச நிறுவனங்களின் ஊழியர்கள் வீதியின் இருமருங்கிலும் ஒன்று கூடி மகா சங்கரத்தினருக்கு பிரிகர வழங்கும் பூஜையில் ஈடுபட்டனர்.
 

Leave a Reply