1200 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகும் ராஜமௌலி - மகேஷ் பாபு படம்
சினிமா
தெலுங்கு திரையுலகின் பிரமாண்ட இயக்குனராக ராஜமௌலி வலம்வருகிறார். இவர் இயக்கிய பாகுபலி இரண்டு பாகங்களாக வெளியாகி வசூலில் ஆயிரம் கோடிகளை தாண்டியது. இப்படம் மிகப்பெரிய பொருட்செலவில் (சுமார் 500 கோடி ரூபாயை தாண்டி) எடுக்கப்பட்டது.
தற்போது ராஜமௌலி தெலுங்கின் முன்னணி நடிகரான மகேஷ் பாபுவை வைத்து புதிய படத்தை இயக்கு வருகிறார். இப்படத்திற்கு பெயர் வைக்கப்டாததால் SSMB29 என அழைக்கப்பட்டு வருகிறது. பிரமாண்ட இயக்குனர், முன்னணி கதாநாயகன் இணைவதால், படத்தின் அடுத்தடுத்த அப்டேட்டுகளை ரசிகர்கள் எதிர்பார்த்து கொண்டிருக்கின்றனர். ஏற்கனவே மிகப்பெரிய பட்ஜெட் படமாக உருவாகும் என்பதால் இரண்டு பகுதியாக வெளியாகுமா? என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்களிடம் இருந்து வந்தது.
இந்த நிலையில், இப்படம் சுமார் 1200 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இது இரண்டு பாகமாக எடுக்கப்பட இருக்கிறது. 120 நாடுகளில் படத்தை ரிலீஸ் செய்ய தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
1000 கோடி ரூபாய்க்கு மேல் செலவு செய்யப்பட்டால், தெலுங்கு சினிமா வரலாற்றில் அதிக பொருட்செலவில் எடுக்கப்பட்ட படம் என்ற சாதனையைப் படைக்கும்.
படத்தின் பர்ஸ்ட் லுக் நவம்பர் மாதம் வெளியாகும் என ராஜமௌலி தெரிவித்தார். இப்படத்தில் பிரியங்கா சோப்ரா, பிரித்விராஜ் சுகுமார் மற்றும் பல முன்னணி நகடிர்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். துர்கா ஆர்ட்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. ஆஸ்கார் விருது வென்ற எம்.எம். கீரவாணி இசையமைக்கிறார்.
























