மூளை கட்டி சிகிச்சைக்கு பின்னர் மீண்டும் பணியில் இணைந்த கனடிய மாகாண அமைச்சர்
கனடா
நியூபிரன்ஸ்விக் மாகாண அமைச்சர் அலிசன் டவுன்சென்ட், மூளை கட்டி சிகிச்சைகளின் பின்னர் மீண்டும் பணியில் இணைந்துள்ளார்.
டவுன்சென்ட் இனி தொழில் தொடர்பான அமைச்சராக பொறுப்பேற்க இருப்பதாக முதல்வர் சூசன் ஹோல்ட் அறிவித்துள்ளார்.
டவுன்சனெ்ட், உடனடியாக புதிய பொறுப்பை ஏற்கவுள்ளதாக கூறியுள்ளார்.
டவுன்சென்ட், கடந்த பிப்ரவரி மாதம் வரை தொழிற் கல்வி, பயிற்சி மற்றும் தொழில் அமைச்சராக பணியாற்றினார்.
பின்னர் அறுவை சிகிச்சை மற்றும் சிகிச்சைக்காக விடுமுறையில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தொழில் தொடர்பான விஷயங்களில் அரசுக்கு வலுவான குரல் அவசியம் எனவும் டவுன்சென்ட் மீண்டும் இணைவது வரவேற்கத்தக்கது எனவும் முதல்வர் ஹோல்ட், தெரிவித்துள்ளார்.























