• Welcome to TamilsGuide
செய்திகள் 1

போம்புரு எல்ல நீர் வீழ்ச்சியில் நீராடிய ஆசிரியர் சடலமாக மீட்பு

இலங்கை

வெளிமட போம்புருஎல்ல நீர் வீழ்ச்சியில் நீராட சென்ற ஆசிரியர் ஒருவர் நீரில் மூழ்கி காணாமல்போன நிலையில் நேற்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

கடந்த சனிக்கிழமை எட்டுபேர் கொண்ட ஆசிரியர் குழுவொன்று குறித்த பகுதிக்கு சுற்றுலா சென்றுள்ளனர்.

இதில் ஒருவர் நீராடி கொண்டிருந்த நிலையில் நீரில் அடித்து செல்லப்பட்டுள்ளார்.

நீரில் அடித்து செல்லப்பட்ட ஆசிரியரை மற்றுமொரு ஆசிரியர் காப்பாற்ற முயற்சி செய்த போது அவர் காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

குறித்த நபரை தேடும் பணியில் சுழிஒடிகளை பயண்படுத்திய போது இவர் சடலமாக மீட்கப்பட்டதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

சடலமாக மீட்கப்பட்ட ஆசிரியர் 31வயதுடைய உடப்புஸ்ஸலாவ பகுதியை சேர்ந்த ஒரு குழந்தையின் தந்தையெனவும் இவர் உடப்புஸ்ஸலாவ டலோஸ் தமிழ் மகா வித்தியாலயத்தில் ஆசிரியராக பணிபுரிந்து வருவதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரிவந்துள்ளது.

இதேவேளை இந்ந பாடசாலையை சேர்ந்த எட்டு ஆண் ஆசிரியர்கள் மாத்திரம் சுற்றுலா சென்றுள்ளதாகவும் இதற்கான அனுமதியினை இவர்கள் நுவரெலியா வலையகல்வி பணிமனையில் பெரவில்லையென நுவரெலியா வலைய கல்வி பணிமனையின் பணிப்பாளர் D.M.P.P.திஷாநாயக்க தெரிவித்தோடு சம்பவம் தொடர்பாக பொலிஸ் அறிக்கை கிடைக்கப்பெற்றவுடன் கல்வி பணிமனையின் ஊடாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட உள்ளதாக அவர் தெரிவித்தார்.

இதேவேளை, சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை ஊவா பரணகம அம்பகஸ்துவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
 

Leave a Reply