• Welcome to TamilsGuide
செய்திகள் 1

மனித உயிர்களுக்காக கவலைப்படுங்கள் - நடிகை ரோகிணி

சினிமா

டெல்லியில் உள்ள தேசிய தலைநகர் பகுதியில் (NCR) உள்ள அனைத்து தெரு நாய்களையும் காப்பகத்தில் அடைத்து பராமரிக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் இரு நீதிபகள் கொண்ட பெஞ்ச் உத்தரவிட்டது.

இதற்கு பிராணிகள் விரும்பிகள் ஆட்சேபனை தெரிவித்தனர். இதனையடுத்து, தலைமை நீதிபதி பி.ஆர். கவாய், இந்த விவகாரத்தை மூன்று நீதிபகள் கொண்ட பெஞ்சிற்கு மாற்றினார்.

இதனையடுத்து டெல்லி தெருநாய்களை காப்பங்களில் அடைக்க வேண்டும் என்ற உச்சநீதிமன்றத்தில் 2 நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதித்து புதிய உத்தரவை 3 நீதிபதிகள் அமர்வு பிறப்பித்துள்ளது.

பதிலாக தெருநாய்களை பிடித்து கருத்தடை, தடுப்பூசி செலுத்தி மீண்டும் அதே பகுதிகளில் விடலாம் என ஆலோசனை வழங்கியது.

நேற்று தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தெருநாய் சர்ச்சை தொடர்பான விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்தில் கலந்துகொண்டு நடிகை அம்மு பேசிய கருத்துக்கள் இணையத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில், தெருநாய் சர்ச்சை தொடர்பான விவகாரத்தில் நடிகை அம்மு வீடியோ ஒன்றை வெளியிட்டார்.

அந்த வீடியோவில், "குழந்தைகளை நாய் கடிக்கும் வரை பெற்றோர்கள் எங்கே போனார்கள். சாதாரணமாக ஒரு நாயை விரட்டக் கூடியவர்கள், அது குழந்தையை கடிக்கும் வரை என்ன செய்தார்கள். நாலு கால் இருக்கும் ஜீவன் வித்தியாசமாக கத்தினாலே நாங்கள் ஓடி வந்து பார்ப்போம். ஒரு குழந்தை நாய்க் கடியால் கதறுகிறது என்றால் அதை பார்த்துக் கொண்டு சும்மாவா இருந்தீர்கள். அந்த குழந்தையை காப்பாத்தனும்னு யாருக்குமே தோனலையா. இந்த நிகழ்ச்சி மொத்தம் 8 மணிநேரம் ஷூட்டிங் நடத்தப்பட்டு, அதில் வெறும் 45 நிமிடங்கள் தான் உங்களுக்கு காட்டப்பட்டுள்ளது. எங்கள் தரப்பில் பேசிய நிறைய விஷயங்களை எடிட் செய்துவிட்டனர். நிறைய இடங்களில் தங்களை பேசுவதற்கே அனுமதிக்கவில்லை" என்று கூறினார்.

இந்நிலையில், நிகழ்ச்சி ஒன்றில் பேசிய நடிகை ரோகிணி, "இப்பொழுது நாய்களின் உயிருக்காக நிறைய பேர் கவலைப்படுகிறார்கள். ஆனால் மனித உயிர்களுக்காக கவலைப்படுங்கள் என்று காலம் காலமாக சொல்லி கொண்டிருக்கிறோம்" என்று நடிகை அம்முவை விமர்சிக்கும் வகையில் பேசினார். 

Leave a Reply