TamilsGuide

அதிபர் – ஆசிரியர் பிரச்சினை -  மட்டக்களப்பில் பெற்றோர் ஆர்ப்பாட்டம்

 அதிபர், ஆசிரியர்களிடையே நிலவி வரும் பிரச்சினை காரணமாக மாணவர்களின் கல்வி செயற்பாடுகள் பாதிக்கப்பட்டள்ளதாகத் தெரிவித்து  மட்டக்களப்பு கல்வி வலயத்திலுள்ள பாலமீன்மடு விக்னேஸ்வரா வித்தியாலயத்தின் முன்பாக ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த ஆர்ப்பாட்டத்தை பெற்றோர், பாடசாலை நலன் சார்ந்த அமைப்புக்கள் இணைந்து நேற்றைய தினம் (01) முன்னெடுத்துள்ளனர்.

இதன்போது ஆர்ப்பாட்டக்காரர்கள் கருத்துத் தெரிவிக்கையில், அதிபர், ஆசிரியர்களிடையே காணப்படும்  பிரச்சினை காரணமாக மாணவர்களின் கல்வி செயற்பாடு கடந்த சில மாதங்களாக பாதிப்படைந்துள்ளன.

இதனை சம்பந்தப்பட்ட கல்வி திணைக்கள அதிகாரிகளுக்கு தெரியப்படுத்திய  போதும் அவர்கள் எவ்வித நடவடிக்கையும் எடுக்க வில்லை. இதன் காரணமாகவே இப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது” என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை கணித பாடத்திற்கான ஆசிரியரை பதில் ஆசிரியர் இல்லாது இடமாற்றம் செய்துள்ளதால் மாணவர்கள் கணித பாட செயற்பாடுகளில் பின்னடைவை எதிர்நோக்கியுள்ளதாகவும்  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கக்கது.

இதேவேளை குறித்த இடத்திற்கு வருகை தந்த தேசிய மக்கள் சக்தியின் மாவட்ட இணைப்பாளர் திலகநாதன், ” மாணவர்களின் கல்வியில் பாதிப்பு ஏற்படா வண்ணம் இப் பிரச்சணைகளுக்குத் தீர்வு காணப்படும் என  உறுதியளித்துள்ளார்.

Leave a comment

Comment