TamilsGuide

இனப்பிரச்சினையை தீர்க்க எந்தவொரு எல்லைக்கும் செல்வோம் – ஜனாதிபதி தெரிவிப்பு

தோல்வியடைந்த அரசியல்வாதிகளே இனவாதத்தை கையில் எடுப்பதாகவும், இனப்பிரச்சினையை தீர்க்க எந்தவொரு எல்லைக்கும் தாம் செல்லவுள்ளதாகவும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவில் இன்று இடம்பெற்ற தெங்கு முக்கோண தொடக்க விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது” தாம் ஒருபோதும் இனவாத அரசியலுக்கு இடமளிக்கப்போவதில்லை எனவும், ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

அத்துடன், நல்லிணக்கத்தையும் சமாதானத்தையும் ஏற்படுத்தும் குறிக்கோளுடனேயே தாம் செயற்பட்டு வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பழைய இனவாத கோஷங்களுக்கு எதிரான முற்போக்கான செயற்பாடுகளை தாம் ஒரு போதும் பின்னோக்கி நகர்த்தப் போவதில்லை எனவும் ஜனாதிபதி இதன்போது தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
 

Leave a comment

Comment