பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் ஹெலிகாப்டர் விழுந்து விபத்து - 5 பேர் பலி
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் கில்கிட்-பால்டிஸ்தானில் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் 2 விமானிகள் மற்றும் மூன்று தொழில்நுட்ப பணியாளர்கள் உட்பட 5 பேர் உயிரிழந்தனர்.
நேற்று, டயமர் மாவட்டத்தின் சிலாஸில் மலைப்பாங்கான பகுதியில் அமைக்கப்பட்ட ஒரு புதிய ஹெலிபேட் மீது சோதனை தரையிறக்கத்தின் போது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
விபத்துக்கான சரியான காரணம் குறித்து விசாரணை நடந்து வருவதாக என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.























