• Welcome to TamilsGuide
செய்திகள் 1

வென்னப்புவ துப்பாக்கிச்சூடு ! இருவர் கைது

இலங்கை

வென்னப்புவ பொலிஸ் நிலையத்திற்கு அருகில் நேற்று (31) காலை இடம்பெற்ற துப்பாக்கிச்சூடு சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் இரண்டு சந்தேக நபர்கள் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை, கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடமிருந்து கார், துப்பாக்கி மற்றும் வாள் என்பன பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன.

வென்னப்புவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வேவா சாலைப் பகுதியில் நேற்று காலை (31) மோட்டார் சைக்கிளில் வந்த ஒரு குழு, மோட்டார் சைக்கிளில் சென்ற ஒருவரை மோதிவிட்டு, பின்னர் கூர்மையான ஆயுதத்தால் தாக்கி துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர்.

இந்த துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்ததுடன் ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, இந்த சம்பவம் தொடர்பில் மூன்று குழுக்கள் நியமிக்கப்பட்டு விசாரணை இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
 

Leave a Reply