TamilsGuide

பேருந்து கட்டணங்களில் மாற்றமில்லை – தேசிய போக்குவரத்து ஆணைக்குழு

எரிபொருள் விலைகள் நள்ளிரவு முதல் குறைக்கப்பட்ட போதிலும், பேருந்து கட்டணங்களில் திருத்தம் மேற்கொள்ளப்படாது என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு (NTC) உறுதிப்படுத்தியுள்ளது.

புதிய எரிபொருள் விலைகள் நேற்று (31) நள்ளிரவு முதல் அமுலுக்கு வந்துள்ளதாக இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.

அதன்படி, ஒட்டோ டீசலின் விலை லிட்டருக்கு ரூ.6 குறைந்து ரூ.283 ஆகவும், சூப்பர் டீசல் லிட்டருக்கு ரூ.12 குறைந்து ரூ.313 ஆகவும் இருக்கும்.

92 ஒக்டேன் ரக பெற்றோல் விலையும் லிட்டருக்கு ரூ.6 குறைந்து ரூ.299 ஆக இருக்கும்.

அதேநேரம், 95 ஒக்டேன் ரக பெற்றோல் மற்றும் மண்ணெண்ணெய் விலைகளில் மாற்றம் மேற்கொள்ளப்படவில்லை.
 

Leave a comment

Comment