10 மில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருளுடன் இருவர் கைது
இலங்கை
சுமார் 10 மில்லியன் ரூபாய் பெறுமதியான ‘ஹஷிஷ்’ போதைப்பொருளுடன் இரு நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக கல்கிசை குற்றப் புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது.
இரண்டு சந்தேக நபர்களிடமிருந்தும் 1.05 கிலோ கிராம் ஹஷிஷ் போதைப்பொருளும், போதைப்பொருள் வர்த்தம் மூலம் ஈட்டியதாக சந்தேகிக்கப்படும் ரூ.1 கோடி ரூபா ரொக்கப் பணத்தையும் பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர்.
கல்கிசை பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவின் பொறுப்பதிகாரிக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் இந்த கைது முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இரத்மலானையில் மாதம் ரூ.30,000 வாடகைக்கு எடுக்கப்பட்ட வீட்டில் இருந்து இந்த வர்த்தகம் மேற்கொள்ளப்பட்டதாக ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இரத்மலானையில் வசிப்பவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அதிகாரிகள் முன்னெடுத்து வருகின்றனர்.























