தனக்கு ஆதரவாக நின்ற அனைத்து தரப்பினருக்கும் நன்றி தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க
இலங்கை
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதிலிருந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட வரை தனக்கு ஆதரவாக நின்ற அனைத்து தரப்பினருக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.
இன்று (01) ஊடகங்களுக்கு சிறப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்ட அவர், தான் கைது செய்யப்பட்ட தருணத்திலிருந்து சமூக ஊடகங்களில் தனக்கு ஆதரவாக நின்ற அனைத்து தரப்பினருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்வதாகக் கூறினார்.
முன்னாள் ஜனாதிபதி அனைத்து தரப்பினரையும் பின்னர் சந்திக்க உள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
https://www.facebook.com/reel/31162830660028333






















