2.2 மில்லியன் மக்களை அரசாங்கம் ஏமாற்றியுள்ளது! -எதிர்க்கட்சி தலைவர்
இலங்கை
நாட்டில் உள்ள 2.2 மில்லியன் மக்களை அரசாங்கம் ஏமாற்றியுள்ளது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம் சுமத்தியுள்ளார்.
நாட்டை வளர்ச்சிப்பாதைக்கு கொண்டு செல்வதாக கூறி ஆட்சிக்கு வந்தவர்கள் முழுமையாக மக்களை ஏமாற்றிவிட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அம்பாறை மாவட்ட ஐக்கிய மக்கள் சக்தி உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் மன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் ”இன்று நமது நாடு ஒரு மோசமான மற்றும் பரிதாபகரமான சூழ்நிலையில் உள்ளது. நாட்டு மக்களுக்கு வரம்பற்ற நம்பிக்கைகள் வழங்கப்பட்டு, அவர்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர்.
இந்த அரசாங்கத்தினால் மருந்துப் பற்றாக்குறைக்கு ஒரு தீர்வைக் கூட இந்த அரசாங்கத்தினால் வழங்க முடியவில்லை.
ஆயிரக்கணக்கான மருத்துவர்கள் நாட்டை விட்டு வெளியேறும் அதே வேளை, சிறந்த மருந்துவர்களை வெளியேறவிடாமல் தடுக்க எந்த தீர்வும் இல்லை. மேலும், நாட்டின் வளர்ச்சிப் பயணத்தை விரைவுபடுத்த எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
அத்தகைய தொலைநோக்குப் பார்வையை செயல்படுத்தத் தகுதியற்ற மற்றும் திறனற்ற ஒரு அரசாங்கத்தால் தான் நாடு தற்போது வழிநடத்தப்படுகின்றது.
பொருட்களின் விலைகள் அதிகரித்து, வருமானம் குறைந்து, தொழிற்சாலைகள் மூடப்பட்டு, மக்கள் நாட்டை விட்டு வெளியேறும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது., நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 50%பங்களிக்கும் நுண், சிறு மற்றும் நடுத்தர வணிகர்கள் மற்றும் தொழில்முனைவோரின் சொத்துக்கள் பராட்டா சட்டத்தின் மூலம் ஏலம் விடப்படுகின்றன.
அரிசியில் தன்னிறைவு பெற்றிருந்த ஒரு நாட்டில், தற்போது நெல்லுக்கு நியாயமான விலை கூட இல்லாமல் அரிசி இறக்குமதி செய்யப்படும் நிலைக்கு நாடு வீழ்ச்சியடைந்துள்ளது, மேலும் நுகர்வோரைப் பாதுகாக்கும் சாக்கில் மோசடிகள் மேற்கொள்ளப்படுவதே இதற்குக் காரணம்
இன்று நெல் விவசாயி முதல் அனைத்து வகையான விவசாயத்திலும் ஈடுபட்டுள்ள மக்கள் வரை அனாதைகளாகிவிட்டதாகவும், விவசாயியை ராஜாவாக்குவதாகக் கூறி ஆட்சிக்கு வந்த இந்த திறமையற்ற அரசாங்கம் விவசாயியை உதவியற்றவர்களாக விட்டுவிட்டார்கள், இந்த மக்களுக்கு அளித்த வாக்குறுதிகள் மற்றும் நம்பிக்கைகளை செயல்படுத்த வேண்டும், அவர்கள் 159 பெரும்பான்மையையும், ஜனாதிபதி பதவியையும், உள்ளூராட்சி நிறுவனங்களின் பெரும்பான்மையையும் தக்கவைத்துக்கொள்வார்களே ஒளிய நாட்டிற்கு எதையும் செய்ய மாட்டார்கள்.
இது தொடர்ந்தால், 2022ம் ஆண்டை போன்று 2028ஆம் ஆண்டிலும் தங்கள் கடனை அடைக்க முடியாது நாடு வங்குரோத்து நிலையை அடைந்துவிடும்” இவ்வாறு சஜித் பிரேமதாச குற்றம் சுமத்தியுள்ளார்.






















