செம்பியன் பட்டத்தை சுவீகரித்த எம்பிலிப்பிட்டிய ஜனாதிபதி கல்லூரி
இலங்கை
ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் அனுசரணையுடன் இலங்கை பாடசாலைகள் கிரிக்கெட் சங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட 15 வயதுக்குட்பட்ட பிரிவு இரண்டு பாடசாலைகளுக்கிடையிலான கிரிக்கெட் போட்டியில் எம்பிலிப்பிட்டிய ஜனாதிபதி கல்லூரி செம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.
பண்டாரகம மைதானத்தில் நடைபெற்ற இறுதிப் போட்டியில், எம்பிலிப்பிட்டிய ஜனாதிபதி கல்லூரி மற்றும் கொழும்பு ரோயல் கல்லூரி ‘B’ அணிகள் மோதின.
போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற கொழும்பு ரோயல் கல்லூரி ‘B’ அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய கொழும்பு ரோயல் கல்லூரி ‘B’ அணி 9 விக்கெட்டுகளை இழந்து 135 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.
136 ஓட்டங்கள் எனும் வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய எம்பிலிப்பிட்டிய ஜனாதிபதி கல்லூரி அணி 47 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுகளை இழந்து 143 ஓட்டங்களைப் பெற்றது.
இலங்கை பாடசாலைகள் கிரிக்கெட் சங்கத்தின் பிரதித் தலைவரும் கல்கிஸ்ஸை விஞ்ஞான கல்லூரியின் அதிபருமான சுசந்த மெண்டிஸ், எம்பிலிப்பிட்டிய ஜனாதிபதி கல்லூரியின் அதிபர் ஆர்.எஸ்.உதயகுமார, கொழும்பு ரோயல் கல்லூரியின் கிரிக்கெட் பொறுப்பாளர் டி.எம்.எஸ்.திசாநாயக்க, இலங்கை பாடசாலைகள் கிரிக்கெட் சங்கத்தின் செயலாளர் லீலானந்த குமாரசிறி மற்றும் 15 வயதுக்குட்பட்ட போட்டியின் செயலாளர் ஆகியோர் வெற்றி கிண்ணங்கள் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டனர்.






















