16 வருடங்களுக்கு பிறகு இணையும் சிவா மனசுல சக்தி காம்போ
சினிமா
கடந்த 2009 ஆம் ஆண்டு எம்.ராஜேஷ் இயக்கத்தில் ஜீவா, அனுயா, சந்தானம் மற்றும் ஊர்வசி முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வெளியானது சிவா மனசுல சக்தி திரைப்படம். இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்தார். திரைப்படத்தில் இடம் பெற்ற அனைத்து பாடல்களும் பெரிய ஹிட்டானது. மேலும் திரைப்படமும் ப்ளாக்ப்ஸ்டர் திரைப்படமாக உருவானது.
படத்தில் இடம் பெற்ற காமெடி காட்சிகள் இன்றும் பலரின் மனதில் இருக்கும். மச்சி ஒரு க்வாட்டர் சொல்லேன், தெரியல மச்சி, அவ போய் 6 மாசம் ஆகுது போன்ற வசனங்கள் இன்றும் ட்ரெண்டிங்கில் உள்ளது.
அப்படத்திற்கு பிறகு ஜீவாவும் ராஜேஷும் இணைந்து பணியாற்றவில்லை. இந்நிலையில் இந்த மெகா வெற்றி கூட்டணி 16 வருடங்களுக்கு பிறகு மீண்டும் ஒன்றாக இணைகின்றனர். ஜீவா நடிப்பில் ராஜேஷ் இயக்கும் இப்படத்திற்கு யுவன் இசையமைக்கிறார். இப்படத்திற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகுமென படக்குழு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பை யுவன் பிறந்தநாளை முன்னிட்டு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.






















