வட சென்னை 2 கண்டிப்பா வரும் - STR49 அப்டேட் கொடுத்த வெற்றி மாறன்
சினிமா
சிலம்பரசன் டி.ஆர். (STR), ரசிகர்களால் சிம்பு என்றும் அழைக்கப்படும் இவர், தக் லைஃப் திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக இயக்குநர் வெற்றிமாறன் இயக்கும் அடுத்த படத்தில் நடிக்க இருக்கிறார். இப்படம் ஒரு வட சென்னையில் நடக்கும் கேங்ஸ்டர் திரைப்படமாக உருவாக இருக்கிறது.
இப்படத்தில் STR முற்றிலும் இளமையான தோற்றம் பெற வேண்டும் என்பதற்காக 10 நாட்களில் 10 கிலோ எடையை குறைத்துள்ளார். இப்படத்தில் இரண்டு தோற்றத்தில் சிம்பு நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
படத்தின் அறிவிப்பு வீடியோ படமாக்கப்பட்ட நிலையில் அதன் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் நடைப்பெற்று வருகின்றன.
வெற்றி மாறனின் உதவி இயக்குநராக இருந்த வர்ஷா பரத் "Bad Girl" என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். இப்படம் வரும் செப்டம்பர் 5 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இப்படத்தை இன்று கமலா திரையரங்கிள் 1000 நபர்களுக்கு மட்டும் திரையிடப்பட்டது. அப்போது படத்தை இளைஞர்கள் மிகவும் ரசித்து பார்த்தனர். படம் முடித்துவிட்டு வெற்றிமாறனிடம் அடுத்த படத்தின் அப்டேட் கேட்டனர். அதற்கு வெற்றி அடுத்து சிம்புவின் படம் இயக்குகிறேன் அதற்கான அப்டேட் இன்னும் 10 நாட்களில் வரும் அதை தொடர்ந்து வட சென்னை2 இயக்குவேன் என கூறினார்.





















