438,500 அவுஸ்திரேலிய டொலர்களுக்கு விற்கப்பட்ட பிராட்மேனின் தொப்பி
இலங்கை
1946-47 ஆஷஸ் தொடரின் போது சர் டொனால்ட் பிராட்மேன் (Donald Bradman) அணிந்திருந்த தொப்பியை அவுஸ்திரேலிய தேசிய அருங்காட்சியகம் AU$438,500 (சுமார் 286,700 அமெரிக்க டொலர்கள்)க்கு வாங்கியுள்ளது.
பேக்கி கிரீன் கான்பெர்ரா அருங்காட்சியகத்தால் வாங்கப்பட்ட இதற்கான பாதி செலவவை அந் நாட் மத்திய அரசு வழங்கியது.
தொப்பியை வாங்குவது எதிர்கால சந்ததியினருக்கு தேசிய வரலாற்றின் ஒரு முக்கியமான பகுதியைப் பாதுகாக்கிறது என்று அவுஸ்திரேலிய கலை அமைச்சர் டோனி பர்க் தெரிவித்துள்ளார்.
இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் இங்கிலாந்துக்கு எதிராக விளையாடிய முதல் 1946-47 ஆஷஸ் தொடரில் அவுஸ்திரேலிய அணியின் தலைவராக செயற்பட்ட போது பிராட்மேன் இந்தத் தொப்பியை அணிந்திருந்தார்.
ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை அவுஸ்திரேலியா 3-0 என்ற கணக்கில் வென்றமையும் குறிப்பிடத்தக்கது.























